top of page

Karuseeragam oil 

  • Writer: Mullai Organic
    Mullai Organic
  • Aug 15, 2019
  • 1 min read

கருஞ்சீரகம் எண்ணெய்


கருஞ்சீரக எண்ணெய்

கருஞ்சீரக எண்ணெய் 10 துளிகளும் ஒரு டீ ஸ்பூன் தேனை வெந்நீரில் கலந்து காலை இரவு இரு வேளைகள் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவற்றிற்கு குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் ஏற்படும்.

தீக்காயத்திற்கு கருஞ்சீரக எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தீக்காயத்தின் மீது தடவ சீக்கிரம் ஆறும்.

நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு அரைஸ்பூன் கருஞ்சீரக எண்ணையை சூடான பாலில் கலந்து சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இருமல் மற்றும் தொண்டை பிரச்சினைகளுக்கு அரை ஸ்பூன் கருஞ்சீரகம் எண்ணெயுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து அத்துடன் உப்பு கொஞ்சம் சேர்த்து நன்றாக கலந்து தொண்டையில் தடவ நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சிறிது கருஞ்சீரக எண்ணெயுடன் விளக்கெண்ணெய் சிறிது சேர்த்து இளம் சூடான பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.

சிறிது கருஞ்சீரக எண்ணெய் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து அந்த எண்ணையை மருதாணி பொடியுடன் கலந்து பேஸ்ட் செய்து தலையில் முடி வேர்களில் படும்படி நன்றாக அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க பொடுகு தொல்லை தீரும்.

சர்க்கரை வியாதி உடையோர் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணையை காலை மாலை டீ டிகாஷனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குறைந்து உலகில் நல்ல முன்னேற்றம் காணலாம்.

 
 
 

Comments


©2019 by Mullai Organics. Proudly created with Wix.com

bottom of page